45 நிமிடத்தில் முடிந்த வாக்கு எண்ணிக்கை


45 நிமிடத்தில் முடிந்த வாக்கு எண்ணிக்கை
x

45 நிமிடத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது.

சிவகங்கை

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் ஒன்றியம் பிரான்பட்டி ஊராட்சியில் காலியாக உள்ள 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. இந்த வார்டில் 195 வாக்காளர்கள் உள்ள நிலையில் 150 வாக்குகள் பதிவாகி இருந்தது. பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி 45 நிமிடங்களில் முடிவுற்றது.

இதில் பைசூர் முகமது என்பவர் 110 வாக்குகள் பெற்று 5-வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கான வெற்றி பெற்ற சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரா வழங்கினார். இதில் மேலாளர் சேதுராமன் உள்பட ஒன்றிய அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






Next Story