வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு அனுப்பி வைப்பு
தமிழக சட்டமன்றதிற்கான பொதுத்தேர்தல்கடந்த ஆண்டு (2021) நடந்தது. இதில் உடுமலை சட்டமன்றத்தொதிக்கு நடந்த பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உடுமலை ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த எந்திரங்களை பல்லடம் தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் ஒப்படைக்கும்படி மாவட்ட கலெக்டர்அறிவுறுத்தியிருந்தார்.அதன்படி உடுமலை ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பயன்படுத்தப்பட்ட அட்டைகள், வாக்குப்பதிவு சீட்டுகள் அகற்றப்பட்டு, அவை ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து 381 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 381 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 386விவிபேட் எந்திரங்கள் ஆகியவை உடுமலை ஆர்.டி.ஓ.ஜஸ்வந்த்கண்ணன் முன்னிலையில் வேன்களில் ஏற்றப்பட்டு, சீல் வைக்கப்பட்டன. அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல், ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் விவேகானந்தன், தாசில்தார் கணேசன், தேர்தல் துணை தாசில்தார் சாந்தி ஆகியோரும் உடனிருந்தனர்.வேன்களில் ஏற்றப்பட்ட இந்த எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.அங்கு அவை பாதுகாப்பு அறையில் வைப்பதற்காக ஒப்படைக்கப்பட்டது.