வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
விராலிமலையில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு விராலிமலை தாசில்தார் சதீஷ் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கடைவீதி, புதிய பஸ் நிலையம் வழியாக சென்று தாசில்தார் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். மேலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
Related Tags :
Next Story