வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
சேரன்மாதேவியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
சேரன்மாதேவியில் வருவாய்த்துறை சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உதவி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தாலுகா அலுவலகத்ைத அடைந்தது.
இதில் சேரன்மாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு, வாக்காளர் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்த பேரணியில், தாசில்தார் பாலசுப்பிரமணியன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சுமதி, அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மரகதவல்லி, வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் இதயக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story