வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்


வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

நீலகிரி

கோத்தகிரி

சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இருப்பினும், 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கி உள்ளது. அதன்படி கோத்தகிரி பஸ் நிலையத்தில், தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குன்னூர் ஆர்.டி.ஓ. புஷ்ணகுமார் கலந்துக்கொண்டு பொதுமக்களிடையே வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார். மேலும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் கோத்தகிரி தாசில்தார் உள்பட வருவாய்த்துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story