ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்


ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
x

வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டார்.

வேலூர்


வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டார்.

வாக்காளர் பட்டியல் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் பல்வேறு காரணங்களினால் காலியாக உள்ள உள்ளாட்சி பதவியிடங்களை நிரப்பிட தற்செயல் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான நிறைவு செய்யப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான குமாரவேல் பாண்டியன் கலெக்டர்அலுவலகத்தில் வெளியிட்டார். வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் விஜயராகவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு உள்ளாட்சி தேர்தலுக்கான மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்செயல் தேர்தல்

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள தட்டப்பாறை, காட்பாடி ஒன்றியத்தில் உள்ள அம்மூண்டி ஆகிய 2 ஊராட்சி தலைவர் மற்றும் பொய்கை ஊராட்சியில் வார்டு எண் 8, அம்மூண்டியில் வார்டு எண் 1 முதல் 9 வரை, கண்டிப்பேடு ஊராட்சியில் வார்டு எண் 8, கார்கூர் ஊராட்சியில் வார்டு எண் 5 ஆகிய 12 ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவி இடங்களுக்கு தற்செயல் தேர்தல் நடைபெற உள்ளது.

ஊரக உள்ளாட்சிகளில் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படவுள்ள தற்செயல் தேர்தலுக்கு 13 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவுகள் நடைபெறவுள்ளது. தற்போது மேற்படி வாக்குச் சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 3,596 பேரும், பெண் வாக்காளர்கள் 3,546 பேரும் என மொத்தம் 7,142 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இறுதி நாள் வரை வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விவரங்கள் வருவாய்த் துறையினரிடமிருந்து பெறப்பட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இந்த தற்செயல் தேர்தலில் ஏறத்தாழ 110 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story