திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.


திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
x

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் பட்டியலை கலெக்டர் வினீத் வெளியிட்டார். அதன்படி தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 222 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 313 பேர், மூன்றாம் பாலினத்தவர் 10 பேர் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 545 பேர் உள்ளனர். காங்கயம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 553 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 30 ஆயிரத்து 551 பேர், மூன்றாம் பாலினத்தவர் 21 பேர் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 125 பேர் உள்ளனர்.

அவினாசி (தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 300 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 394 பேர், மூன்றாம் பாலினத்தவர் 4 பேர் என மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 698 வாக்காளர்கள் உள்ளனர். திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 92 ஆயிரத்து 618 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 87 ஆயிரத்து 540 பேர், மூன்றாம் பாலினத்தவர் 140 பேர் என மொத்தம் 3 லட்சத்து 80 ஆயிரத்து 298 வாக்காளர்கள் உள்ளனர். திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 874 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 874 பேர், மூன்றாம் பாலினத்தவர் 35 பேர் என மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 783 வாக்காளர்கள் உள்ளனர்.

பல்லடம்

பல்லடம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 90 ஆயிரத்து 379 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 94 ஆயிரத்து 38 பேர், மூன்றாம் பாலினத்த வாக்காளர்கள் 69 பேர் என மொத்தம் 3 லட்சத்து 84 ஆயிரத்து 486 வாக்காளர்கள் உள்ளனர். உடுமலை சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 632 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 633 பேர், மூன்றாம் பாலினத்தவர் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 290 வாக்காளர்கள் உள்ளனர்.

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 854 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 120 பேர், மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் என மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 994 வாக்காளர்கள் உள்ளனர். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 42 ஆயிரத்து 432 பேரும், பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 76 ஆயிரத்து 463 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 324 பேரும் என மொத்தம் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், தாசில்தார் (தேர்தல்) தங்கவேல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

உறுதி செய்து கொள்ளலாம்

வரைவு வாக்காளர் பட்டியல்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், தாசில்தார் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்த்து தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.


Related Tags :
Next Story