திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்க்கை-நீக்குதல் முகாம்
திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்க்கை-நீக்குதல் முகாம்
திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்க்கை- நீக்குதல் முகாம் நடைபெற்றது. இதில் புதிய வாக்காளர்கள் உற்சாகமாக விண்ணப்பித்தனர்.
வாக்காளர் பெயர் சேர்க்கை முகாம்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்பட்ட 2023 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 12,13, 26, 27 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு சேர்க்கை முகாம்கள் நடைபெற்றது. முகாமில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் உற்சாகமாக வந்து புதிய வாக்காளர்களாக தங்களை சேர்க்க விண்ணப்பித்தனர். தேர்தல் ஆணையத்தின் வலைதளத்திலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ளன விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமக்கோட்டை
இதேபோல் திருமக்கோட்டையில் மன்னார்குடி தாசில்தார் உத்தரவின் பெயரில் திருமக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் ஆகிய முகாம் நடைபெற்றது. இதில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர் காந்தி, கிராம உதவியாளர்கள் ராஜேந்திரன், வீரையன் ஆகியோர் புதிதாக விண்ணப்பித்த மனுக்களை பெற்றுக்கொண்டனர். இதில் 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.