வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்


வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

வேதாரண்யத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு பள்ளி செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர் வசந்தா வரவேற்றார். இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சித்திரவேல், பள்ளி ஆசிரியர்கள் சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலட்சுமி, ஆனந்தன் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. வாக்காளர் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பள்ளி வளாகத்தில் கோலப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story