3 உள்ளாட்சி பதவிகளுக்கு விறுவிறுப்பான வாக்குப்பதிவு


3 உள்ளாட்சி பதவிகளுக்கு விறுவிறுப்பான வாக்குப்பதிவு
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 3 உள்ளாட்சி பதவிகளுக்கு விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

தற்செயல் தேர்தல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலமங்கலம் ஒன்றிய ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (வார்டு எண் 12), கொப்பகரை கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் (வார்டு எண் 4), தளி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (வார்டு எண் 16) ஆகிய வார்டுகளுக்கு உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நேற்று நடந்தது.

இதற்காக அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மையத்தில் நேற்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. இதையொட்டி வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தலை முன்னிட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

72 சதவீதம்

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 12-வது வார்டு இடைத்தேர்தலில் பேவநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்தனர். அதன்படி மாலை 6 மணி நிலவரபடி கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய 12-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 74 சதவீதம் வாக்குகள் பதிவானது.

அதேபோல் கொப்பக்கரை ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் 54 சதவீதம் வாக்குகள் பதிவானது. தளி ஊராட்சி ஒன்றிய 16 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 67.93 சதவீத ஓட்டுப்பதிவாகும். மாவட்டத்தில் 3 உள்ளாட்சி பதவிகளுக்கும் மொத்தம் 72 சதவீத வாக்குகள் பதிவானது.


Next Story