விருத்தாசலம் மாணவர்கள் தேர்வு
தமிழக ஜம்ப் ரோப் அணிக்கு விருத்தாசலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனா்.
கடலூர்
விருத்தாசலம்:
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் 16-வது தேசிய அளவிலான ஜம்ப் ரோப் விளையாட்டு போட்டி வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தமிழக அணியில் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் மீந்தசெல்வம், வாசுதேவன், பேரரசு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், உதவி தலைமை ஆசிரியர் கலையரசன், முதுகலை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தண்டபாணி ஆகியோர் பாராட்டி, 3 மாணவர்களுக்கான பயண செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டனர். அப்போது உறுப்பினர் பொன்.கணேஷ், உடற்கல்வி ஆசிரியர் ராஜராஜ சோழன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story