விருத்தாசலம் பெட்ரோல் பங்கில் எண்ணெய் திருடிய முதியவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாகிறது
விருத்தாசலம் பெட்ரோல் பங்கில் எண்ணெய் திருடிய முதியவரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
கடலூர்
விருத்தாசலம்,
விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டை புறவழிச்சாலையில் தனியார் பள்ளி அருகே பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு அலுவலக அறையில் தூங்கினர். நேற்று காலை எழுந்து பார்த்தபோது, பெட்ரோல் போடும் எந்திரம் அருகே வைக்கப்பட்டிருந்த ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 5 லிட்டர் எண்ணெய் கேனை காணவில்லை. உடனே ஊழியர்கள், அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவு 12.30 மணியளவில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் 5 லிட்டர் எண்ணெய் கேனை திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
Related Tags :
Next Story