மின்வாரிய தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


மின்வாரிய தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x

திருப்பத்தூரில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பின்வாரிய பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். போராட்டத்தில் 7 மாதம் முதல் மின்வாரிய தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி வழங் வேண்டும், மின்சார தொழிலாளர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் தமிழக அரசே உடனடியாக அவுட்சோர்சிங் எம்ப்ளாய்மென்ட் முறையினை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினார்கள்.

காத்திருப்பு போராட்டத்தில் மின் வாரிய 7 தொழிற்சங்கங்களும், மின்வாரிய கெங்மேன் முதல் செயற்பொறியாளர்கள் வரை காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். காத்திருப்பு போராட்டத்தை ஒட்டி காலை, மாலை, இரவு 3 வேளைகளிலும் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.


Next Story