வலங்கைமான் பேரூராட்சி கூட்டம்
வலங்கைமான் பேரூராட்சி கூட்டம்
திருவாரூர்
வலங்கைமான் பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நேற்று பேரூராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் ஷர்மிளா சிவனேசன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பரமேஸ்வரி, துணைத்தலைவர் தனித்தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் புதிதாக அமைச்சர் பதவி ஏற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது. குப்பையில்லா மற்றும் திறந்தவெளி கழிவறை இல்லாத பேரூராட்சியாக திருவாரூர் மாவட்டத்திலேயே வலங்கைமானை முதன்மைப்படுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story