மோட்டார்சைக்கிளுடன் கிணற்றில் விழுந்து வாலிபர் பலி
ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் கிணற்றில் விழுந்து பலியானார்.
ஆற்காடு
ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் கிணற்றில் விழுந்து பலியானார்.
மோட்டார்சைக்கிளுடன் கிணற்றில் விழுந்தார்
ஆற்காடு அடுத்த பெரிய உப்புப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (வயது 32). விவசாயி. இவரது மனைவி மீனா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் பாரதி மோட்டார் சைக்கிளில் விவசாய நிலத்தின் அருகே சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.
வெளியில் சென்ற பாரதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தனர். அப்போது கிணற்றில் மோட்டார் சைக்கிள் விழுந்ததற்கான அடையாளம் மற்றும் செருப்பு இருந்ததைக் கண்டு பாரதி கிணற்றில் விழுந்து இருக்கலாம் என கருதி ஆற்காடு தாலுகா போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பிணமாக மீட்பு
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது பாரதி கிணற்றில் விழுந்து இறந்தது தெரியவந்தது. அவருடைய உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.