பாராளுமன்றத்தை நோக்கி நடைபெறும் போராட்டத்தில் திரளாக கலந்துகொள்ள வேண்டும்


பாராளுமன்றத்தை நோக்கி நடைபெறும் போராட்டத்தில் திரளாக கலந்துகொள்ள வேண்டும்
x

பாராளுமன்றத்தை நோக்கி நடைபெறும் போராட்டத்தில் திரளாக கலந்துகொள்ள வேண்டும்

திருப்பூர்

அனுப்பர்பாளையம்,

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 2-வது மண்டல பேரவை கூட்டம் போயம்பாளையம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிர்வாகி விஜய் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநகர் மாவட்ட குழு செயலாளர் ரவிச்சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் மோகன், 2-வது மண்டல குழு செயலாளர் சசிகுமார், மண்டல துணை செயலாளர் முத்துப்பாண்டி, இளைஞர் பெருமன்ற மாநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்த்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் பாராளுமன்றத்தை நோக்கி டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் திருப்பூர் 2-வது குழு சார்பில் நிர்வாகிகள் கலந்து கொள்வது என்றும், அடுத்த ஒரு மாதத்தில் உறுப்பினர் பதிவை முடித்து, கிளை மாநாடு மற்றும் மண்டல மாநாட்டை நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



Next Story