மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடை சாத்தப்பட்டது


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடை சாத்தப்பட்டது
x

சூரிய கிரணகத்தையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடை சாத்தப்பட்டது.

மதுரை

சூரிய கிரணகத்தையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடை சாத்தப்பட்டது.

சூரிய கிரகணம்

சூரிய கிரகணம் நேற்று மாலை 5.23 மணிக்கு ஆரம்பமாகி 6.23 மணிக்கு முடிவடைந்தது. அதையொட்டி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை அம்மன், சுவாமி மூலஸ்தானத்தில் பலகனி கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்பட்டது.

அந்த நேரத்தில் பக்தர்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்ததை தொடர்ந்து பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

கிரகண கால அபிஷேகம்

மேலும் சூரிய கிரகணத்தின் மத்திம காலத்தில் மாலை 5.51 மணிக்கு தீர்த்தம் கொடுக்கப்பட்டு, அம்மன், சுவாமிக்கு கிரகண கால அபிஷேகம் நடந்தது. அதன்பின்பு சந்திரசேகரர் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அதற்கு பின்னர் இரவு 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் ஐப்பசி மாத கோலாட்ட உற்சவம், சுவாமி புறப்பாடு நேற்று ஒரு நாள் மட்டும் இரவு 7 மணிக்கு பின் நடந்தது.

மதுரையில் உள்ள அனைத்து கோவில்களிலும் சூரிய கிரகணத்தையொட்டி காலை முதல் இரவு 7 மணி வரை கோவில் நடைகள் அடைக்கப்பட்டன. பின்னர் கிரகண கால அபிஷேகம் முடிந்து கோவில் நடைகள் திறக்கப்பட்டது.

==========


Related Tags :
Next Story