விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் வாக்களிப்பது குறித்து சுவர் விளம்பரப்போட்டி


விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில்    வாக்களிப்பது குறித்து சுவர் விளம்பரப்போட்டி
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் வாக்களிப்பது குறித்து சுவர் விளம்பரப்போட்டி நடைபெற்றது.

விழுப்புரம்


விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் விழுப்புரம் மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் ஒருங்கிணைத்த வாக்காளரிடையே தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் "வாக்களிப்பது எனது உரிமை" என்னும் தலைப்பில் சுவர் விளம்பரப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியை கல்லூரி முதல்வர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். ஆங்கில துறைத்தலைவர் ரவி, மாணவர்களை வாழ்த்தினார். போட்டி ஒருங்கிணைப்பாளரான தமிழ்த்துறை உதவி பேராசிரியர் குணசேகர், போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதனை பேராசிரியர்கள் அருள்தாஸ், ஜெயந்தி, ராஜவேல், தமிழ்ச்செல்வி ஆகியோர் பார்வையிட்டனர்.

இப்போட்டியில் மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கல்லூரி அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் பரிசுகள் வழங்கப்படும்.


Next Story