கோரையாற்றில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்


கோரையாற்றில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்
x

நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரையாறு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ரிஷியூர் ஊராட்சியில் வரதராஜ பெருமாள் கட்டளை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு வி.பி.கட்டளை மற்றும் ஒட்டுச்சாவடி என்ற பெயரும் உண்டு. இந்த கிராமம் கோரையாற்றங்கரையில் வடபுறம் உள்ளது. வி.பி. கட்டளையில் இருந்து கோரையாற்றின் வடக்கு புறம் தண்டாலம் பாலம் வரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது.இந்த சாலையை பயன்படுத்தி குறுக்கு வழியாக தண்டாலம், கற்கோவில் கருவேலங்குளம், வெள்ளக்குடி, விழல்கோட்டகம், அதங்குடி, பொதக்குடி, கீழாளவந்தசேரி, மேலாளவந்தசேரி, தேவங்குடி, அரிச்சப்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் தண்டாலம் பாலம் வழியாக வரதராஜபெருமாள் கட்டளை, கட்டையடி, பெரம்பூர் வழியாக நீடாமங்கலம் வந்து செல்கின்றனர்.

தடுப்புச்சுவர்

இந்த சாலை மண் சாலையிலிருந்து தார் சாலையாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவசரமாக அமைக்கப்பட்டது. இந்த தார் சாலையில் வரதராஜ பெருமாள் கட்டளை அருகில் மண் சரிவு ஏற்பட்டு கோரையாற்றில் சரிந்துள்ளது. தற்போது வரும் ஜூன் மாதம் அரசு விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கும் நிலை உள்ளது.மேலும் பருவ மழைக்காலங்களில் மழை அதிகம் இருந்தால் மேலும் மண் சரிவு ஏற்பட்டு ஆற்றில் உடைப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் மண் சரிவு ஏற்பட்டுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story