தானிய சாகுபடி பரப்பளவு குறைந்ததால் உணவுக்காக பறவைகள் அலைபாய்கிறது.


தானிய சாகுபடி பரப்பளவு குறைந்ததால் உணவுக்காக பறவைகள் அலைபாய்கிறது.
x

தானிய சாகுபடி பரப்பளவு குறைந்ததால் உணவுக்காக பறவைகள் அலைபாய்கிறது.

திருப்பூர்

தளி,

தானிய சாகுபடி பரப்பளவு குறைந்ததால் உணவுக்காக பறவைகள் அலைபாய்கிறது.

தானிய சாகுபடி

நம்மில் விவசாயமே பிரதானம். அனைத்து உயிரினங்களின் அடிப்படை சங்கநாதம் விவசாயம். சாகுபடி இல்லையேல் எதுவும் இல்லை. முன்பெல்லாம் பயிர் வகைகள், தானிய வகைகள் இறவை சாகுபடியில் மட்டுமல்ல மானாவாரியாகவும் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படும். அவை விளைந்து அறுவடைக்கு தயாராகும் போது பறவைகள் அதிக அளவில் வந்து அவற்றை தின்று விட்டு சென்று விடும். அதற்காக பயறு வகைகள், தானிய வகைகள் சாகுபடி செய்யப்பட்ட தோட்டம், வயல் மற்றும் காடுகளில் பரண் அமைத்து காவல் காப்பார்கள். அதையும் மீறி கிளிகள் உள்ளிட்ட பறவையினங்கள் கூட்டமாக வந்து கதிர்களை துவம்சம் செய்து விடும்.

காலப்போக்கில் சாகுபடி பரப்பளவு குறைந்து போனது. இடுபொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாகுபடி குறைந்து போனது. இதனால் தரிசு நிலங்கள் வீட்டுமனைகள், தொழிற்சாலைக்காக விற்பனை செய்யப்பட்டன. தற்போது அவற்றில் குடியிருப்புகள் கட்டிடங்கள் கட்டப்படுவதால் அந்த பகுதியில் இருந்த மரங்கள் முற்றிலும் வெட்டப்பட்டது.

இதனால் அந்த மரங்களில் கூடு கட்டியிருந்த பறவைகள் கூடுகளை இழந்தன. கூடு கட்ட மரம் கிடைக்காமல் தவியாய் தவிக்கிறது. அது மட்டுமல்ல சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இருக்கிற மரங்கள் காவு கொடுக்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க கூடுகளை இழந்த பறவைகள் தானியம் கிடைக்காமல் அலையாய் அலைகிறது.

இது குறித்து பறவை ஆர்வலர்கள் கூறியதாவது:-

சாகுபடி

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக வெள்ளைச் சோளம், கம்பு, ராகி, சூரியகாந்தி, பாசிப்பயறு, துவரை, தட்டை பயிறு, உளுந்து உள்ளிட்ட பயிறு வகைகள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும் தானிய உணவு வகைகளை சார்ந்து பல்வேறு வகையான பறவைகளும் வசித்து வந்தது. பறவைகள் மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ததுடன் எச்சங்கள் மூலமாக வேம்பு, அரசு, ஆலமரம் உள்ளிட்ட மரங்களின் விதைகளை ஆங்காங்கே தூவி மரம் நடுதலில் பெரும் பங்காற்றி வந்தன.

தற்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் தானிய சாகுபடி இல்லாததால் பறவைகள் உணவு தேடி நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. அப்ேபாது சோர்வடைந்த பறவைகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றன. எனவே தண்ணீர் வசதியுள்ள விவசாயிகள் விளை நிலத்தின் ஒரு பகுதியில் தங்களால் முடிந்த அளவு தானிய பயிர்களை சாகுபடி செய்வதற்கு முன்வர வேண்டும்.இதனால் பறவை இனங்களின் அழிவு தடுக்கப்பட்டு அவற்றின் இனப்பெருக்கம் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story