காட்டன் சூதாட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது


காட்டன் சூதாட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது
x

காட்டன் சூதாட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் உத்தரவின் பேரில் வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் காட்டன் சூதாட்டத்தை தடுப்பது சம்பந்தமாக தனிப்படை போலீசார் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு தனிப்படை போலீசார் வாணியம்பாடி நியூடவுன்-பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவரை பிடித்து விசாரித்த போது, ஆம்பூரை அடுத்த கம்பிகொல்லை பகுதியை சேர்ந்த தண்டபாணி (வயது 39) என்பதும் காட்டன் சூதாட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

மேலும் புதிய பஸ் ஸ்டாண்டு பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபடும்படி ஒருவரை மிரட்டி பணம் பறித்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை வாணியம்பாடி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டபாணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காட்டன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீதும் அதை ஒருங்கிணைக்கும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story