பிள்ளை வாய்க்காலில் சிமெண்டு சாய்தளம் அமைக்க வேண்டும்
பூதலூர் அருகே தீட்சசமுத்திரம் பகுதியில் பிள்ளை வாய்க்காலில் சிமெண்டு சாய்தளம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரி்க்கை விடுத்துள்ளர்.
திருக்காட்டுப்பள்ளி;
பூதலூர் அருகே தீட்சசமுத்திரம் பகுதியில் பிள்ளை வாய்க்காலில் சிமெண்டு சாய்தளம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரி்க்கை விடுத்துள்ளர்.
பிள்ளை வாய்க்கால்
பூதலூர் தாலுகா கச்சமங்கலம் அணைப்பகுதியில் இருந்து பிரியும் வாய்க்கால் பிள்ளை வாய்க்கால். இந்த பிள்ளை வாய்க்கால் 27 கிலோமீட்டர் தொலைவுக்கு பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று 15,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வருகிறது. இந்த பிள்ளை வாய்க்காலில் நீரோட்டத்தை சீராக அமைப்பதற்கு வசதியாக ரூ.16 கோடி மதிப்பில் கரைகளை வலுப்படுத்தி கான்கிரீட் சாய் தளங்கள் அமைத்தல், தரைப்பகுதியில் தண்ணீர் விரைந்து ஓடுவதற்கு வசதியாக கான்கிரீட் தளம் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கோாிக்கை மனு
இப்பணிகளை உலக வங்கி ஆய்வு குழு அண்மையில் பார்வையிட்டுச் சென்றது. இந்த சூழ்நிலையில் பிள்ளை வாய்க்காலில் தீட்சசமுத்திரம் ஊராட்சி பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு கரைகளில் சாய்தள காங்கிரீட் மற்றும் தரைத்தள கான்கிரீட் அமைக்கப்படாமல் உள்ளது. இது குறித்து அண்மையில் பூதலூர் வருகை தந்த தமிழக நீர் வளஆதாரத்துறைஅமைச்சர் துரைமுருகனிடம் பூதலூர் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் காந்தி கோரிக்கை மனு அளித்தார்.இந்த கோரிக்கை மனுவில் கச்சமங்கலம் தலைப்பிலிருந்து பிரியும் பிள்ளை வாய்க்கால் தலைப்பில் இருந்து கடைமடை வரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தீட்சசமுத்திரம் பகுதியில் ஒரு கிலோமீட்டர் பகுதியில் தூரத்துக்கு கரைகள் மற்றும் தரை தளம் அப்படியே விடப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்து சீமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத பகுதிகளிலும் முறையாக சீரமைப்பு பணிகளை நடப்புஆண்டு மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினாா்.