மின் விளக்குகள் பொருத்த வேண்டும்


மின் விளக்குகள் பொருத்த வேண்டும்
x

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் அந்த சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மின்விளக்கு பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் அந்த சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மின்விளக்கு பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவக்கல்லூரி சாலை

தஞ்சையில் உள்ள முக்கிய சாலைகளில் மருத்துவக்கல்லூரி சாலையும் ஒன்று. இந்த சாலையின் வழியாக தினமும் ஏரானமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் உள்ளன. மேலும் இந்த சாலையின் வழியாக தஞ்சையில் இருந்து வல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், அந்த பகுதியில் இருந்து தஞ்சைக்கும் ஏராளமான அரசு பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்டவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகளவில் இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு போக்குவரத்து அதிகம் காணப்படும் இந்த சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பு சுவரில் கம்பங்கள் அமைக்கப்பட்டு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மேம்பாலத்தில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகம் முதலாவது கேட் வரை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.

மின்விளக்குகள்

மேலும் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகம் முதலாவது கேட் பகுதியில் இருந்து தென்னக பண்பாட்டு மையம் வரையும், தொடர்ந்து தஞ்சை-திருச்சி புறவழிச்சாலை வரை மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக இந்த சாலையில் இரவு 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை மக்கள் அதிகளிவில் செல்வார்கள். அந்த நேரங்களில் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்வோர் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் ஏற்படுமோ? என்ற அச்சத்தில் சென்று வருகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் மேம்பாலத்தில் இருந்து ஆஸ்பத்திரி வரை மட்டுமே மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்துள்ள பகுதிகளில் மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இருள் நிறைந்து காணப்படுகிறது.

இருள்சூழ்ந்து காணப்படும்

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக அழைத்து வரப்படுவார்கள். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உறவினர்களை பார்ப்பதற்காக ஏராளமானோர் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இப்படி வருபவர்கள் இருள்சூழ்ந்து காணப்படும் பகுதியை கடந்து செல்லும் போது மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பகல் நேரங்களில் இந்த பகுதியில் கால்நடைகள் சுற்றி திரிகின்றன.இவை பகலில் கண்ணில் தெரியும் ஆனால் இரவில் இவை கண்களுக்கு தெரிவதில்லை. இதனால் கால்நடைகள் மீது வாகனங்கள் மோதி வாகனஒட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story