தகரக்கொட்டகையில் இயங்கும் சோழங்கநத்தம் ஊராட்சி ஒன்றிய பள்ளி
கபிஸ்தலம் அருகே தகரக்கொட்டகையில் இயங்கும் சோழங்கநத்தம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கபிஸ்தலம்;
கபிஸ்தலம் அருகே தகரக்கொட்டகையில் இயங்கும் சோழங்கநத்தம் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகரக்கொட்டகை
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் சோழங்கநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடம் பழுதடைந்ததால் கட்டிடம் இடிக்கப்பட்டது. இந்தநிலையில் மாணவ- மாணவிகளுக்கு இடிக்கப்பட்ட கட்டிடத்தின் அருகே உள்ள தகரக் கொட்டகையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்த கொட்டகையில் வெயில் மற்றும் தூசி, விஷப்பூச்சிகளைத் தடுக்கும் வகையில் தகரக் கொட்டகையை சுற்றி தார்ப்பாய் சுற்றப்பட்டு அவல நிலையில் பள்ளி காட்சியளிக்கிறது.
புதிய கட்டிடம்
எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு சோழங்கநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, ஆதனூர், ஒலைப்பாடி ஒன்றிய கவுன்சிலர் கே. முருகன் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.