புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும்


புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும்
x

தஞ்சை- பட்டுக்கோட்டை இடையே புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்று ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

தஞ்சை மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க 60-ம் ஆண்டு கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது. கூட்டத்துக்கு துணை தலைவர் ஜமீல் தலைமை தாங்கினார். பாபநாசம் ரெயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் சரவணன் வரவேற்றார். தஞ்சை மாவட்ட செயலாளர் கிரி ஆண்டு அறிக்கை வாசித்தார். கூட்டத்தில், தஞ்சை- விழுப்புரம் இரட்டை வழி ரெயில் பாதைக்கு ஒப்புதலை விரைவில் வழங்க வேண்டும்.மேலும் அதற்கான பணிகளை உடனே தொடங்கி வருகிற 2028-ம் ஆண்டு மகாமக திருவிழாவுக்கு முன்பு நிறைவேற்ற வேண்டும். கும்பகோணம் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும். கும்பகோணம், தஞ்சை வழியாக பழனி, பொள்ளாச்சி, கோவைக்கு நேரடி ரெயில் சேவை வழங்க வேண்டும். தற்போது கும்பகோணம், தஞ்சை வழியாக இயக்கப்படும் அகமதாபாத்- திருச்சி மற்றும் மும்பை- தூத்துக்குடி சிறப்பு ரெயில்களை நிரந்தர ரெயிலாக இயக்க வேண்டும். எர்ணாகுளம்- தாம்பரம் இடையே கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக புதிய ரெயில் சேவை தொடங்க வேண்டும். தஞ்சை- பட்டுக்கோட்டை புதிய ரெயில் பாதை விரைவாக அமைக்கப்பட வேண்டும்.நீடாமங்கலத்தில் இருந்து அரியலூருக்கு கும்பகோணம் வழியாக புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் நடராஜகுமார் நன்றி கூறினார்.


Next Story