புதிய கால்நடை ஆஸ்பத்திரி கட்டப்படுமா?


புதிய கால்நடை ஆஸ்பத்திரி கட்டப்படுமா?
x

கூத்தாநல்லூர் அருகே, சாத்தனூரில் புதிய கால்நடை ஆஸ்பத்திரி கட்டப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனா்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே, சாத்தனூரில் புதிய கால்நடை ஆஸ்பத்திரி கட்டப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனா்.

கால்நடை ஆஸ்பத்திரி

கூத்தாநல்லூர் அருகே உள்ள சாத்தனூரில், அப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இங்கு பழையனூர், சாத்தனூர், ஓவர்ச்சேரி, தண்ணீர்குன்னம், நாகங்குடி, காக்கையாடி, வடபாதிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், தங்கள் வீடுகளில் வளர்த்து வரும் ஆடு, மாடு, கோழி மற்றும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சேதமடைந்த கட்டிடம்

கடந்த சில ஆண்டுகளாக இந்த கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. கட்டிடத்தில் ஆங்காங்கே சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவுக்கு சேதமடைந்து விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால் மழைநீர் உள்ளே சென்று பல்வேறு வகையில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும், கட்டிடத்தின் தன்மை பலம் இழந்து உள்ளதால், எதிர்பாராதவிதமாக இடிந்து விழும் வாய்ப்பு உள்ளது.எனவே கூத்தாநல்லூர் அருகே, சாத்தனூரில் சேதமடைந்த மிகவும் சிறிய அளவிலான கட்டிடத்தை அகற்றி விட்டு கால்நடை டாக்டர் மற்றும் மக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைத்தும், மற்றும் கால்நடைகளை பாதுகாப்பாக நிற்க வைப்பதற்கும் ஏற்ற வகையில் புதிதாக கால்நடை ஆஸ்பத்திரி கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story