ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து வார்டு கவுன்சிலர் தர்ணா


ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து வார்டு கவுன்சிலர் தர்ணா
x

ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து வார்டு கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டை

பொன்னமராவதி:

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளது. இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக சந்திராவும், துணை தலைவராக சுப்புலெட்சுமியும் உள்ளனர். இந்நிலையில் 6-வது வார்டில் பொதுமக்களுக்கு எந்தத் திட்டங்களும் செயல்முறைப்படுத்தவில்லை என அந்த வார்டு கவுன்சிலர் சுப்பிரமணி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story