காட்டாத்துறை ஊராட்சி கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு
ராகுல்காந்தி பதவி பறிப்பை கண்டித்து காட்டாத்துறை ஊராட்சி கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு
கன்னியாகுமரி
திருவட்டார்,
காட்டாத்துறையில் ஊராட்சி மன்ற கூட்டம் தலைவர் இசையாஸ் தலைமையில் நடந்தது. செயலாளர் சுஜன் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து துணைத்தலைவர் ஜெபதாஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் ஆன்றணி, விஜின், ஆன்றோ ஜோஸ், விஜயலெட்சுமி, ஜெஸி, பாத்திமா, எல்சி, சூசைமுத்து, செல்வின் ஜெபகுமார் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் ரதிபிரியா, பிளஸ்சி உள்ளிட்டவர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், அவர்கள் ஊராட்சி அலுவலகம் முன் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். முன்னதாக அவர்கள் கருப்பு உடை அணிந்து கூட்டத்துக்கு வந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story