அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வார்டு சபா திட்டம்


அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வார்டு சபா திட்டம்
x

சோளிங்கரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வார்டு சபா திட்டம், நகராட்சி கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

சோளிங்கரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வார்டு சபா திட்டம், நகராட்சி கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

வார்டு சபா திட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி கூட்டம் நகராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் பரந்தாமன், துணைத் தலைவர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரும் வகையில் வார்டு சபா என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் ஒவ்வொரு வார்டுகளிலும் வார்டு உறுப்பினர் தலைமையில் நான்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறை அப்பகுதியில் கூட்டம் நடத்தி, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, நகர மன்ற கூட்டத்தில் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணிகளை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்

இதனைத் தொடர்ந்து 8-வது வார்டு உறுப்பினர் கோபால் பேசிகையில் சோளிங்கர்- வாலாஜா சாலையில் சினிமா தியேட்டர் எதிரில் இரண்டு டாஸ்மாக் கடைகள்‌ இயங்கி வருகிறது. குடிமகன்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு மது வாங்க செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவிகள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். தினசரி விபத்துகள் ஏற்படுகிறது.

எனவே இரண்டு டாஸ்மாக் கடைகளையும் அகற்ற நகராட்சி நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும். யோக நரசிம்மர் கோவிலில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு பக்தர்‌களின் வாகனத்திற்கு சுங்க வரி வசூல் ஏலம் விடுவதை நிறுத்திவிட்டு, நகராட்சி நிர்வாகமே கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு வரி வசூல் செய்ய வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பணிகள் மற்றும் வரி வசூல் செய்பவர்களை கண்காணிக்கவும், வீடு கட்டும் பணிகளை கண்காணிக்கவும் குழு அமைக்க வேண்டும என்று மனு அளித்தார். 27 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


Next Story