நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் அதிக பணம் வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை கலெக்டர் எச்சாிக்கை


நெல் கொள்முதல் நிலையங்களில்  விவசாயிகளிடம் அதிக பணம் வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை கலெக்டர் எச்சாிக்கை
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் அதிக பணம் வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சாிக்கை விடுத்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 61 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் நிலையங்களில் இதுவரை 10,500 மெட்ரிக் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நேரடி கொள்முதல் மையங்களை கண்காணிப்பதற்கு துணை கலெக்டர் தலைமையில் தாலுகா வாரியாக மேற்பார்வை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து அரசு விதிமுறைக்கு புறம்பாக முறைகேடாக பணம் வசூல் செய்வதாக புகார்கள் எழுந்தது. இதுதொடா்பான முறைகேடு செய்வது கண்டறியபட்டால் அதில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை மூலமாக குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story