சதுர்த்தி விழாவில் போலீசாருக்கு தெரியாமல் விநாயகர்சிலை வைக்கக்கூடாது என எச்சரிக்கை

சதுர்த்தி விழாவில் போலீசாருக்கு தெரியாமல் விநாயகர்சிலை வைக்கக்கூடாது என எச்சரிக்கை
x

சதுர்த்தி விழாவில் போலீசாருக்கு தெரியாமல் விநாயகர் சிலை வைக்கக்கூடாது என ஆலோசனை கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

சதுர்த்தி விழாவில் போலீசாருக்கு தெரியாமல் விநாயகர் சிலை வைக்கக்கூடாது என ஆலோசனை கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கண்ணமங்கலம், சந்தவாசல் பகுதியில் வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவதை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைப்பது, ஊர்வலம் நடத்துவது தொடர்பாக கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்து முன்னணியினர், விநாயகர் சிலைகள் வைப்பவர்கள், செய்பவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும் அடுத்த கூட்டம் விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பேசுகையில், ''காவல் துறைக்கு தெரியாமல் சிலைகள் வைக்கக்கூடாது, விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட நாளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க வேண்டும் என்பது உள்பட சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வராமல் விழா கொண்டாடவேண்டும்'' என்பன உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story