சாத்தான்குளத்தில் தொழிலாளியை அடித்து கொன்று உடல் எரிக்கப்பட்டது
சாத்தான்குளத்தில் தொழிலாளியை அடித்துக் கொன்று உடல் எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தட்டார்மடம்:
சாத்தான்குளத்தில் தொழிலாளியை அடித்துக் கொன்று உடல் எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தச்சு தொழிலாளி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). தச்சு தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கண்ணன் வீடு திரும்பவில்லை. அவரை மகன்களும், உறவினர்களும் தேடி வந்தனர்.
எரிந்த நிலையில் உடல் மீட்பு
இந்த நிலையில் சாத்தான்குளம் கரையடி சுடலைமாடசாமி கோவில் குளத்தின் கரை அருகில் உள்ள சுடுகாட்டில் பாதி எரிந்த நிலையில் ஆண் உடல் கிடப்பதாக நேற்று சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
துணை போலீஸ் சூப்பிரண்டு அருள், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அங்கு எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் கண்ணன் என தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
2 வாலிபர்களிடம் விசாரணை
மேலும் இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் கண்ணனை சாத்தான்குளம் அருகே உள்ள தஞ்சைநகரம் மற்றும் திசையன்விளையை சேர்ந்த 2 வாலிபர்கள் கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை சுடுகாட்டில் வைத்து எரித்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த 2 வாலிபர்களை பிடித்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஏற்படுத்தி உள்ளது.