ரோட்டோரம் கொட்டப்படும் கழிவுகள்


ரோட்டோரம் கொட்டப்படும் கழிவுகள்
x
திருப்பூர்


குடிமங்கலம் அருகே மாநில நெடுஞ்சாலையின் ரோட்டோரத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

கழிவுகள்

பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை வழியாக தினமும் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. தமிழகத்தில் திண்டுக்கலில் இருந்து குடிமங்கலம், பெதப்பம்பட்டி வழியாக கேரளாவிற்கு காய்கறிகள் தினமும் கொண்டு செல்லப்படுகின்றன.

பொள்ளாச்சி தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் குடிமங்கலம் அருகே குட்டைக்கு அருகே ரோட்டோரத்தில் கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், நூல்மில்கள், இறைச்சி கழிவுகள் ஆகியவையும் ரோட்டோரம் கொட்டப்படுகிறது.

நடவடிக்கை

குடிமங்கலம் அருகே ரோட்டோரத்தில்கழிவுகள் கொட்டப்படுவதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகளுக்கு சிலர்தீ வைத்து எரிப்பதால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் உள்ளது.

குடிமங்கலம் அருகே மாநில நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் கழிவுகள் கொட்டப்படுவதக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இரவு நேரங்களில் கண்காணிப்பு அதிகரிக்க வேண்டும். கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story