கழிவுகளை அகற்ற கட்டணமில்லா தொலைபேசி எண்
தானியங்கி வாகனம் மூலம் கழிவுகளை அகற்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் அறிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டை:
தானியங்கி வாகனம் மூலம் கழிவுகளை அகற்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கழிவுகளை கைகளால் அகற்ற தடை
மனிதர்களைக் கொண்டு கைகளால் மனிதக் கழிவுகளை அகற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு ஜாமீனில் வர அனுமதி கிடையாது.
கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ, அபராதமோ, அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படலாம்.
கட்டணமில்லா தொலைபேசி எண்
நாம் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய தானியங்கி கழிவுநீர் அகற்றும் வாகனத்தை பயன்படுத்த வேண்டும்.
நகராட்சி மற்றும் மோட்டார் வாகன அலுவலகத்தில் பதிவு பெற்ற கழிவுநீர் வாகனங்கள் மட்டுமே கழிவுகளை அகற்ற பயன்படுத்த வேண்டும். கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மூலமாக கழிவுகளை அகற்ற கட்டணமில்லா தொலைபேசி எண் 14420 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.