சாலையில் கொட்டப்படும் மண்கழிவுகள்


சாலையில் கொட்டப்படும் மண்கழிவுகள்
x

சாலையில் கொட்டப்படும் மண்கழிவுகள்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் நொய்யல் வீதி காங்கயம் செல்லும் சாலையோரத்தில் மண்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையோரத்தில் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணி முடிந்த பின்னர் எஞ்சிய மண்ணை அப்புறப்படுத்தாமல் அப்படியே சாலையோரத்தில் போட்டுவிட்டு செல்கின்றனர். இந்த மண்கழிவுகள் பல மாதங்கள் ஆகியும் அப்புறப்படுத்தாமல் உள்ளது. ேமலும் பொதுமக்கள் சாலையோரத்தில் குப்பைகளையும் கொட்டிச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்ணை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Next Story