தற்காலிக மீன் மார்க்கெட்டில் இருந்து சாலையோரம் வழிந்தோடும் கழிவுநீர்


தற்காலிக மீன் மார்க்கெட்டில் இருந்து சாலையோரம் வழிந்தோடும் கழிவுநீர்
x

தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே தற்காலிக மீன்மார்க்கெட்டில் இருந்து சாலையோரத்தில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்


தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே தற்காலிக மீன்மார்க்கெட்டில் இருந்து சாலையோரத்தில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்காலிக மீன் மார்க்கெட்

தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து மாநகராட்சி பள்ளி வரை தற்காலிக மீன்மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு நாகை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடல்மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.இது தவிர நண்டுகள் மேற்கு வங்காளத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும். தஞ்சைக்கு கொண்டுவரப்படும் மீன்கள் இங்கு ஏலமிடப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சில்லறை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

சாலையோரத்தில் வழிந்தோடும் கழிவுநீர்

தற்காலிக மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்கும் ஒரு சிலர் தாங்கள் வாங்கும் மீனை அப்படியே வீட்டிற்கு கொண்டு சென்று வெட்டி சுத்தம் செய்து சமையல் செய்வார்கள். ஒருசிலர் கடைகளிலேயே மீன்களை வெட்டி சுத்தம் செய்து வீட்டிற்கு கொண்டு செல்வார்கள். இவ்வாறு கடைகளில் வெட்டும் போது கிடைக்ககூடிய கழிவுகளை வெட்டும் இடத்திலேயே போட்டு விடுகின்றனர்.மேலும் அதோடு இருக்கும் கழிவுநீரை அங்கே ஊற்றி விடுகின்றனர். கழிவுநீர் மார்க்கெட்டிற்குள் தேங்காமல் இருக்க நடைமேடையின் குறுக்கே கற்களை பெயர்த்து எடுத்துள்ளனர். அந்த வழியாக கழிவுநீர் சாலையோரத்தில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

மேலும் கொள்ளுப்பேட்டை தெரு மற்றும் பழைய மாரியம்மன் கோவில் தெருவுக்கு செல்லும் சாலையில் வெள்ளைப்பிள்ளையார் கோவில் ரவுண்டானா அருகே சாலையின் நடுவே மீன் மார்க்கெட்டில் இருந்து வெளியேறும் இந்த கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் அந்த சாலை சேதமடைந்து குண்டும், குளியுமாக காட்சி அளிக்கிறது.இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் மீன் மார்க்கெட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடாமல் இருக்கவும், ரவுண்டானா அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.


Next Story