கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்த கழிவுநீர்


கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்த கழிவுநீர்
x

திருத்துறைப்பூண்டியில் கிராம நிர்வாக அலுவலகத்தில் கழிவுநீர் புகுந்ததால் ஊழியர்கள் அவதிப்பட்டனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டியில் கிராம நிர்வாக அலுவலகத்தில் கழிவுநீர் புகுந்ததால் ஊழியர்கள் அவதிப்பட்டனர்.

கிராம நிர்வாக அலுவலகம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் 2 கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ளன. இதில் ஒன்று சிங்களாந்தி கிராம நிர்வாக அலுவலகம் ஆகும். இந்த அலுவலகம் திருத்துறைப்பூண்டி ஆட்டுர் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்காக தினசரி ஏராளமானோர் வருகிறார்கள்.இந்த நிலையில் சமீபத்தில் மழை பெய்தபோது மழைநீரும், அருகில் உள்ள கழிவு நீர் தொட்டியில் உள்ள கழிவுநீரும் கலந்து கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் புகுந்தது. இதனால் அங்கு பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் கடும் அவதிப்பட்டனர்.

சீரமைப்பு பணிகள்

அவர்கள் கழிவுநீரை சிரமப்பட்டு வெளியேற்றினர். அலுவலகத்துக்குள் கழிவுநீர் புகுந்ததால் துர்நாற்றம் வீசுவதோடு, பணியாற்றுவது சிரமமாக உள்ளதாக ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் கழிவுநீர் புகாத வகையில் உரிய சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story