சுகாதார சீர்ேகட்டின் பிறப்பிடமாக மாறிவரும் அரசலாறு


சுகாதார சீர்ேகட்டின் பிறப்பிடமாக மாறிவரும் அரசலாறு
x

கும்பகோணத்தில் சுகாதார சீர்ேகட்டின் பிறப்பிடமாக மாறிவரும் அரசலாற்றை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோாிக்கை விடுத்துள்ளனா்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணத்தில் சுகாதார சீர்ேகட்டின் பிறப்பிடமாக மாறிவரும் அரசலாற்றை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோாிக்கை விடுத்துள்ளனா்.

தூர்வாரும் பணி தீவிரம்

காவிரி டெல்டா பாசனத்துக்காக வழக்கம் போல இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் ஆறு, குளம், ஏரி, வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.காவிரி ஆறு கல்லணையை வந்தடைந்ததும் அங்கிருந்து வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், காவிரி, கொள்ளிடம் என பிரிகிறது. காவிரி ஆறு தஞ்சை மாவட்டத்துக்குள் நுழையும்போது 5 கிளைகளாக பிரிகிறது. இதில் ஒன்று அரசலாறு ஆகும்.

அரசலாறு

அரசலாறு கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டையில் தொடங்கி கும்பகோணம் வழியாக பயணித்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வரை செல்கிறது. இந்த ஆறு மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.நூற்றுக்கணக்காக கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக அரசலாறு விளங்கி வருகிறது. புனித நதியாக கருதப்பட்டு வரும் அரசலாறு சமீபகாலமாக தனது புனித தன்மையை இழந்து வருகிறது.

குப்பைகள்

கும்பகோணம் தாராசுரத்தில் செல்லக்கூடிய அரசலாற்றில் படித்துறைகள், பழதடைந்த பாலம் மற்றும் புதிய பாலம் உள்ளன. பாலங்கள் முறையான பராமரிப்பின்றி இருப்பதால் பக்கவாட்டு பகுதியில் செடிகள் வளர்ந்து உள்ளன.பாலத்தில் இருந்து அரசலாற்றுக்குள் தினமும் இறைச்சி கழிவுகள், குப்பைகள், இளநீர் கூடுகள், நுங்குகள், பழைய துணிகள், மருத்துவ கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டபப்டுகின்றன. இதனால் அரசலாறு குப்பைகள் நிறைந்து சுகாதார சீர்கேட்டின் பிறப்பிடமாக காட்சி அளிக்கிறது. .

மனித கழிவால் மாசடையும் அவலம்

இதுகுறித்து தாராசுரத்தை சேர்ந்த ராஜ்குமார் கூறியதாவது:- அரசலாற்று படித்துறை பகுதிக்கு செல்ல முடியாத அளவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை மா்மநபர்கள் சிலர் சேதபடுத்தி படித்துறைக்கு செல்கின்றனர்.அதுமட்டுமின்றி அரசலாற்று படித்துறையை திறந்த வெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றன. குவிந்து கிடக்கும் குப்பைகளால் ஆற்றில் தேங்கி உள்ள நீர் சாக்கடை போல மாறிவிட்டது. அவற்றில் இரை தேடி பன்றிகள் அதிகளவில் வருகின்றன.தொற்று நோய் பரவும் அபாயம்அரசலாறு தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. குவிந்து கிடக்கும் குப்பைகள், மனித கழிவுகளால் பாலத்தின் வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடிய படி சென்று வருகின்றனர்.இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரலாற்றை தூர்வாரி குவிந்து கிடக்கும் குப்பைகளையும் அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story