குழாய் வழியாக வீணாகும் குடிநீர்
திருமருகல் அருகே திருக்கண்ணபுரத்தில் குழாய் வழியாக குடிநீர் வீணாகி வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே திருக்கண்ணபுரத்தில் குழாய் வழியாக குடிநீர் வீணாகி வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வீணாகும் குடிநீர்
நாகை மாவட்டம் திருமருகல் அருகே திருக்கண்ணபுரத்தில் உள்ள ஓம் சக்தி கோவில் எதிரில் குடிநீர் குழாய் அடைக்கப்படாமல் குடிநீர் வீணாக செல்கிறது.
இந்த பகுதியில் குடிநீர் குழாய் கடந்த 3 மாதங்களாக சரிவர மூடப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் திருக்கண்ணபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
நடவடிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்கு உள்ள ராதாரம்பூர் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகிறார்கள். எனவே வீணாகும் குடிநீரை சேமித்து ராதாரம்பூர் பகுதிக்கு வழங்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.