கூட்டநெரிசலை ஒழுங்குபடுத்த 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள்
ீபாவளி பொருட்கள் வாங்க வரும்போது கடைவீதிகளில் கூட்டநெரிசலை ஒழுங்குபடுத்தவும், குற்ற செயல்களில் ஈடுபடுவோரை உடனுக்குடன் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்யவும் திருவண்ணாமலையில் 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளி பொருட்கள் வாங்க வரும்போது கடைவீதிகளில் கூட்டநெரிசலை ஒழுங்குபடுத்தவும், குற்ற செயல்களில் ஈடுபடுவோரை உடனுக்குடன் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்யவும் திருவண்ணாமலையில் 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை
நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடைகள், பலகாரங்கள் தயாரிக்க தேவையான பொருட்கள், ஆடை அணிகலன்கள் வாங்க குவிந்து வருகின்றனர்.
பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு நேற்று முன்தினம் முதல்தான் போனஸ் வழங்கி வருகின்றனர். இன்றும் சில நிறுவனங்களில் போனஸ் வழங்குவதால் நடுத்தர மக்கள் அதனை வாங்கித்தான் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்குகின்றனர்.
திருவண்ணாமலை ஜவுளிக்கடைகளில் தீபாவளிக்காக ஜவுளி ரகங்கள் குவிக்கப்பட்டுள்ளன. தெருக்களில் திடீரென முளைத்துள்ள கடைகளில் ஆயத்த ஆடைகள் குவிக்கப்பட்டுள்ளன. இவற்றை வாங்கவும் பலகாரங்கள் தயாரிக்க தேவையான மளிகை பொருட்கள் வாங்கவும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் குவிந்து வருகின்றனர். விலை உயர்வு இருந்தாலும் பண்டிகையை கொண்டாட ஆவலுடன் அவர்கள் குவிந்து வருகின்றனர்.
மேலும் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் பட்டாசு கடைகள் வைக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு கோபுரங்கள்
இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு, பணம்பறிப்பு, நகை பறிப்பு போன்றவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்கவும், கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும் திருவண்ணாமலை பஜார் பகுதியில்டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையின் முக்கிய கடை வீதிகளான சின்னக்கடை தெரு, தேரடி வீதி, கடலைக்கடை மூலை சந்திப்பு, திருமஞ்சன கோபுர வீதி ஆகிய பகுதியில் 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் போலீசார் தொடர்ந்து பைனாகுலர் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
ஒலிபெருக்கி மூலம்
மேலும் திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் கடை வீதிகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தங்கள் உடமைகள் மற்றும் நகைகளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரனும் போலீசாரை அவ்வப்போது அறிவுறுத்்தி பணிகளை கண்காணித்து வருகிறார்.