ஊஞ்சலூர் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


ஊஞ்சலூர் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x

ஊஞ்சலூர் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

ஈரோடு

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகே வள்ளியம்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து சிவகிரிக்கு குடிநீர் பயன்பாட்டுக்காக ரூ.13 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக மாதிரி ஓட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஈரோடு கரூர் மெயின் ரோட்டில் உள்ள கொம்பனைப்புதூரில் பதிக்கப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் பீய்ச்சியடித்தபடி தார்சாலையில் வீணாக ஓடி வருகிறது. இதன் காரணமாக சிவகிரி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீரால் ரோட்டில் ஒரு பெரிய பள்ளமும் ஏற்பட்டுள்ளது. அதில் தண்ணீர் தேங்கி வருகிறது. இந்த பள்ளத்தில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விடாமல் இருக்க ரோட்டில் அதன் அருகே தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story