கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் தண்ணீர் புகுந்தது


கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் தண்ணீர் புகுந்தது
x

எடப்பாடியில் பெய்த கனமழையால் கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் தண்ணீர் புகுந்தது.

சேலம்

எடப்பாடி

எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக எடப்பாடி பஸ் நிலையம் மற்றும் சரபங்கா நதியை ஒட்டிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவு மழை நீர் தேங்கியது. விடிய, விடிய தொடர்ந்து பெய்த கனமழையால் எடப்பாடி- ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள ஆவணி பேரூர் கீழ் முகம் கிராம நிர்வாக அலுவலக வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள வருவாய் துறை அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவு மழை நீர் புகுந்தது. கிராம நிர்வாக அலுவலர் அறைக்குள் புகுந்த மழை நீரில் அங்கிருந்த பல ஆவணங்கள் நனைந்து சேதம் அடைந்தன. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த வருவாய் துறையினர் அலுவலகத்திற்கு உள்ளே தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தி அங்கிருந்து ஆவணங்களை மீட்டு வருகின்றனர். அடுத்து வரும் சில தினங்களில் அப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்யும் நிலையில், மேலும் அப்பகுதி பாதிப்புக்கு உள்ளாகலாம் என அங்கு குடியிருப்போர் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story