வரி செலுத்தாதவர்கள் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்


வரி செலுத்தாதவர்கள் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்
x

வரி செலுத்தாதவர்கள் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்

நாகப்பட்டினம்

வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வேதாரண்யம் நகராட்சியில் 2023-ம் ஆண்டு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில்வரி,குடிநீர் கட்டணம், கடை வாடகை மற்றும் தொழில் உரிமை கட்டணம் ஆகியவற்றை உடனடியாக பொதுமக்கள் செலுத்த வேண்டும்.

நகராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக உடனே நிலுவையில் உள்ள வரித்தொகையினை செலுத்த வேண்டும். வரிகளை செலுத்தவில்லை என்றால் பாக்கி வைத்துள்ளவரின் பெயர்கள் பொதுஇடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story