நீர்மேலாண்மை மேம்படுத்தப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


நீர்மேலாண்மை மேம்படுத்தப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
x

நீர்மேலாண்மை மேம்படுத்தப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

திருப்பூர்

தளி

நீர்மேலாண்மை மேம்படுத்தப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

நீர்மேலாண்மை

இயற்கையோடு இணைந்ததுதான் விவசாயம். இன்று பல்வேறு காரணங்களால் விவசாயம் நலிவடைந்து வருகிறது. இளைய தலைமுைறயினர் விவசாயத்தை ேவப்பங்காயாக பார்க்கிறார்கள். ஏனெனில் விவசாயம் செய்தால் புதுசட்டை கூட வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. எனவே விவசாய சாகுபடி பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. அது மட்டுமல்ல விவசாயத்தில் முதலீடு செய்தால் அந்த தொகை திரும்ப கிடைக்கும் என்ற நிச்சயமன்ற தன்மை உள்ளது. எனவே விவசாயிகள் தங்களது நிலத்தை வீட்டுமனைகளாக விற்பனை செய்கிறார்கள். தங்களது குழந்தைகளை விவசாய பக்கம் வர வேண்டாம் என்று கூறிவிட்டனர்.

இதே நிலையில் சென்றால் உணவுப் பொருட்கள் உற்பத்தி குறைந்து உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்புகளும் வெகுதொலைவில் இல்லை. விவசாயத்தை முழுமையாக மீட்டெடுப்பதற்கு முதலில் நீர் மேலாண்மையை முறைப்படுத்த வேண்டும்.ஆறுகள், குளங்கள், அணைகள் ஏரிகள், நீர்வழித்தடங்கள் போன்றவற்றை ஆண்டுதோறும் தூர்வார வேண்டும். மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தை வீணாக்காமல் முழுமையாக சேமிக்க வேண்டும்.ஏட்டளவில் உள்ள நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும்.வீணாக கடலில் கலக்கும் ஆறுகளை தடுத்து புதிதாக அணைக்கட்டுகள் கட்டப்பட வேண்டும். விவசாயத்தை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கடும் பாதிப்பு ஏற்படும்.

பராமரிப்பு

ஊராட்சி நிர்வாகங்கள் மூலமாக கிராமங்களைச் சுற்றியுள்ள நீர் வழித்தடங்களை தூர்வாரி பராமரித்து வருவதுடன் அதில் தடுப்பணைகள் கட்டியும் குளம் குட்டைகளை தூர்வாரியும் தண்ணீரை சேமித்து வருவதுடன் வீடுகள்தோறும் மழைநீர் சேமிப்பு நமது கிராமத்தின் மழைநீர் நமக்கே சொந்தம் என்று விளைநிலங்கள் மற்றும் கழிவுநீர்க் கால்வாய்களில் மலைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை புதிதாக குளங்கள் அமைத்து சேமிப்பது போன்ற பணிகளில் தீவிர கவனம் செலுத்தினால் ஓரிரு ஆண்டுகளில் நிலத்தடி நீர்இருப்பு உயர்ந்து ஓவ்வொரு கிராமமும் நீர்இருப்பில் தன்னிறைவு பெற்றதாக மாறும். விவசாயமும் செழிக்கும் வேலை வாய்ப்புகள் ஏற்படும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

----


Next Story