தியாகராஜர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது
திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் தியாகராஜர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் தியாகராஜர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த மழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவ மழை தீவிரம்அடைந்ததன் காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி திருவாரூரில் நேற்று காலை இருண்ட வானிலை நிலவியது.
இதை தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு தொடங்கிய பலத்த மழை 2 மணி நேரம் வெளுத்து வாங்கியது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தியாகராஜர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது
சில இடங்களில் சாக்கடை நீருடன், மழை நீர் கலந்து ஓடியதால் நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். ஏற்கனவே சாலைகள் பழுதடைந்து உள்ள நிலையில் பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
பலத்த மழையால் திருவாரூர் தியாகராஜர் கோவில் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் மழை நீர் புகுந்து குளம் போல் தேங்கி நின்றதால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். இந்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மன்னார்குடி
மன்னார்குடி நகரம் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளான பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டினம், கண்டிதம்பேட்டை, சுந்தரக்கோட்டை, பைங்காநாடு, சேரன் குளம், பாமணி, மூவாநல்லூர், மேலவாசல், காரிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வயல்களில் மழைநீர் தேங்கியது
நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இந்தமழையின் காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா நெல் நடவு செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
உணவின்றி தவிக்கும் ஆடுகள்
கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு தொடங்கிய பலத்த மழை விடிய, விடிய கொட்டித்தீர்த்தது. தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. இதன் காரணமாக ஆடுகள் உணவின்றி தவித்து வருகின்றன. மழையினால் மேய்ச்சலுக்கு செல்ல முடியாமல் கட்டிடங்களின் ஓரங்கள் நின்று முடங்கி கிடக்கின்ற