ராசிபுரத்தில் ஏரிக்கரை உடைந்து வயல்களில் தண்ணீர் புகுந்தது


ராசிபுரத்தில் ஏரிக்கரை உடைந்து வயல்களில் தண்ணீர் புகுந்தது
x

ராசிபுரத்தில் ஏரிக்கரை உடைந்து வயல்களில் தண்ணீர் புகுந்தது.

நாமக்கல்

ராசிபுரம்:

சந்திரசேகரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தட்டான்குட்டை ஏரி ராசிபுரத்தை ஒட்டி உள்ளது. இந்த ஏரி சுமார் 85 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் 200 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று, பயனடைந்து வருகிறது. இந்தநிலையில் தட்டான்குட்டை ஏரியில் ராசிபுரம் நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் பாதாள சாக்கடை நீர் கலக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் சந்திரசேகரபுரம் ஊராட்சியில் நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் ஏரிக்கரையை சுமார் 6 அடி நீளத்துக்கு உடைத்தனர். இதனால் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் வயல்களில் புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அங்கு சென்று ஏரியை நேரில் பார்வையிட்டனர். அப்போது அவர்களிடம் ஏரிக்கரையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story