காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 நாட்களாக காவிரி ஆற்றில் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்தநிலையில் தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி களில் பரவலாக மழை பெய்ய தொடங்கி உள்ளது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. மாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து, கண்காணித்து வருகிறார்கள்.


Next Story