குளங்களில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கு பாராட்டு
உடன்குடி பகுதியில் குளங்களில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் ஆகியோர் நேற்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தண்டுபத்திலுள்ள அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தனர். அப்போது, வருகின்ற மழை காலங்களுக்கு முன்பு உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து குளங்கள், குட்டைகள் மற்றும் தண்ணீர் வரும் கால்வாய்கள் ஆகியவற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுத்தமைக்கும், செட்டியாபத்து ஊராட்சியில் புதியதாக குளம் அமைத்ததற்கும் பாராட்டையும், வாழ்த்துக்களையும் அமைச்சருக்கு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story