திருமங்கலம் பிரதான நீட்டிப்பு கால்வாயில் இருந்து ஆ.கொக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் திறப்பு
திருமங்கலம் பிரதான நீட்டிப்பு கால்வாயில் இருந்து ஆ.கொக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டது
மதுரை
செக்கானூரணி,
செக்கானூரணியில் வைகை திருமங்கலம் பிரதான நீட்டிப்பு கால்வாயில் இருந்து ஆ.கொக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நீர்ப்பாசன கோட்ட தலைவர் ராமன், ஊராட்சி மன்ற தலைவர் நர்மதா கபி.காசிமாயன், ஒன்றிய கவுன்சிலர் சிவபாண்டி, ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், அறிவழகன் மற்றும் கணபதி, அழகு சுந்தரம், கோடாங்கி கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் ஷட்டரை திறந்து வைத்தனர். ஷட்டரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வாய்க்காலில் பாய்ந்தோடியது. அதன் மீது மலர் தூவி வரவேற்றனர்.இந்த தண்ணீர் திறப்பால் அப்பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Related Tags :
Next Story