குடகனாறு அணையில் தண்ணீர் திறப்பு


குடகனாறு அணையில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே உள்ள குடகனாறு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது.

திண்டுக்கல்

வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 27 அடி உயர கொண்ட குடகனாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. வினாடிக்கு 1,200 கன அடியாக நீர்வரத்து உள்ளது. இந்நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் நீதிபதி, உதவி பொறியாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Next Story